CopyPastehas never been so tasty!

reply

by anonymous

  • 0
  • 0
  • 0
199 views

இல்லை பேசணும் :) 

November 1993. திருடா திருடா பார்க்க அபிராமி தியேட்டரிலே நின்னுகிட்டு இருந்தேன்.  முதல் நாள் முதல் காட்சி. முதல் வகுப்பு ஃபுல். கடைசி வகுப்பிலே முண்டியடித்து டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுது, ஏகப்பட்ட அடிதடி. வரிசை சீராக நகர்ந்தால் எனக்குக் டிக்கெட் கிடைக்கும். இடையில் அவ்வப்பொழுது ஒரு கும்பல் கரைச்சல் குடுத்துக் கொண்டிருந்தது. போலீஸ்காரன் வந்தான். மொத்தமாக கன்னா பின்னாவென்று முட்டியிலே போட்டான். நான் போலீஸ்காரன் கிட்டே வாங்கின முதல் அடி அது. ஆனால் வரிசை ஒழுங்குக்கு வந்து கிடைக்க வேண்டிய அனைவருக்கும் டிக்கெட் கிடைத்து. போலீஸ்காரன் செய்தது அதிகார வரம்பு மீறல். ஆனாலும் எனக்கு நியாயம் கிடைத்து என்பதால் அந்தச் செயல் எனக்குச் சரியாகப் பட்டது. அது போல இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எந்த ஒரு விஷயம், 'I am the only cheif ministerial candidate in the party' சொல்கிற கருணாநிதியின் சொத்தான ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட திமுகவிற்கு தோல்வியைத் தருமோ, அந்த முடிவினை ஆதரிக்கின்ற நிலையில் இருக்கிறேன். மற்றபடி தேர்தல் கமிஷன் அதிகார எல்லை எதுவரை என்பதைதேர்தல் முடிந்ததும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் :)

Add A Comment: