CopyPastehas never been so tasty!

கனவில் வந்த கதை!

by anonymous

  • 0
  • 0
153 views

 

நண்பனிடமிருந்து அழைப்பு, தோழி மரணப்படுக்கையில் இருக்கிறார், பார்க்க வந்துடுன்னான்.

 

சரி மச்சான், போய் சேர்ந்ததும் ட்வீட் போடு

 

அடி செருப்பால, என்னடா சொல்ற.?!!

 

டேய் டேய்,.. அய்யய்யோ தப்பா எடுத்துக்காத, அங்கப் போனதும் ஒரு மிஸ்ட் கொடு

 

 - - - - - -

 

கவலைப்பட்டதிங்க செல்வி, ஒன்னும் ஆகாது. டாக்டர் என்ன கடவுளா உங்களுக்கு நாள் குறிக்க. நீங்க கல்யாணம் ஆகி நூறு வருஷம் சந்தோசமா வாழ்வீங்க செல்வி!

 

\\ இப்ப நீங்க என்ன ஜோசியரா, நாள் குறிச்சு தரீங்க.. :) \\

 

:) நாள் குறிக்கிறது என்ன, மாப்ள கூட பார்த்துட்டேன். அப்பா அம்மாட்ட சொல்லிட்டு உடனே கல்யாணத்த முடிச்சுடலாம். அடிமை இப்ப வந்துட்டே இருக்கான். அவன் தான், உங்கள நல்லபடியா கவனிச்சுப்பான்...

 

\\ யாரு அந்த அடிமை. பாவம் வுட்ருங்க. அவராது சந்தோசமா வாழட்டும். என் சாவ எதிர்பார்த்து சங்கடப்பட வேண்டாம். \\

 

“ நீங்க ஒன்னும் பேசாதிங்க. திருமணம் வேண்டாம்னு நீங்க சொல்லலியே அதுலயே புரிஞ்சுகிட்டேன். அடிமை யாருன்னும் guess பண்ணிட்டிங்கன்னு தெரியுது.. :) இருங்க இதோ வந்திடுறேன்.. “

 

“ டேய் மச்சான், எங்கடா இருக்க..? “

 

‘ என்னடா அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் போயிட்டியா? ஆறுதலா பேசுனியா? நான் எப்பிடிடா பேசுறது..? ‘

 

“ நீ எங்கிட்டு இருக்கன்னு தான் கேட்டேன். அறிவுக்கொழுந்து நீ ஒன்னும் ஆறுதலும் சொல்ல வேண்டாம். ஹாஸ்பிட்டலுக்கும் போக வேணாம். செல்வி வீட்டுக்கு வந்து சேரு.. கெளம்பி வா உடனே.. “

 

- - - - - - - - - - - - - - -

 

“ வாடா மச்சான், இதுக்காது சொன்னபடி நேரத்துக்கு வந்தியே. என் கல்யாணத்துக்கு தான் நீ வரல. இப்போ உன் கல்யாணத்த நான் தான் நடத்தி வைக்கப் போறேன்... “

 

‘ என்னடா சொல்ற. ஒரு மண்ணும் விளங்கல. ‘

 

“ ஒரு புண்ணாக்கும் உனக்கு புரிய வேணாம்.. செல்விய கல்யாணம் பண்ணிக்க. “

‘ …( யோசனைக்குப் பின்..) சரி மச்சான்.. ‘

 

- - - - - - - - - - - - - - - - -

 

\\ ஒரு ஓரமா நீங்க என்ன விரும்புறது தெரியும். கல்யாணம் செய்துக்கலாம். ஆனா ஒரு மனைவியா நான் உங்களுக்கு என்ன தர முடியும். நான் செத்த பின்ன வேற கல்யாணம் செய்துப்பீங்களா..? \\

 

‘ கண்டிப்பா செய்துப்பேன். ஆனா நூறு வயசு கிழவனுக்கு யாரும் பொண்ணு தருவாங்களா? :) ‘

 

\\ ஹ ஹா.. \\

 

“ .. ( ..எவ்ளோ புத்தியா பேசறான்..!!!!) .. “

 

‘ ( இத்தனை வருஷம் அலைய விட்டு இப்பவாது இரக்கம் வந்ததே.. ) நீங்க என் மனைவியாகுற சந்தோசமே போதும். அதை விட வேற பாக்கியம் எனக்கு உலகத்துல வேறென்ன இருக்கு.. ‘

 

\\ என் பேரு செல்வி. ‘நீங்க’ இல்ல.. :) \\

 

‘ :) வா செல்வி போலாம். நூறு வயசு வரைக்கும் நாம வாழப்போறோம்.. ‘

 

\\ அதென்ன நூறு வருஷம்?!. போதுமா...? \\

 

‘ போதாது தான்.. சரி. பூமி அழியுற வரை வாழலாம். :) ‘

 

\\ :) :) \\

 

‘.. மச்சான்... ‘

 

“ கெளம்பிட்டேன் ராசா.. போலாம் “

தொடக்கம்!

  - - - - - - - - - - - - -

 

அவள் உடம்பில் கேன்சர் பாதிக்காத செல்கள் போல என்னிடம் நம்பிக்கை நிறைய இருக்கிறது. அவநம்பிக்கையைத் தான் ரேடியேசனில் அழிக்கணும். அவள் பெற்றோரால் முடியாமற் போகலாம். நான் ஏழு கடல், ஏழு மலை தாண்டியும் அவள் உயிரை கேன்சரிலிருந்து மீட்டு வருவேன்.

 

Tweet : ‘ தம்பதிகளாய் நூறாண்டு வாழப் போகிறோம். வாழ்த்துங்கள்! பிரார்த்தியுங்கள்! ‘

 

நண்பன் உடனே RT செய்து விட்டான்!