CopyPastehas never been so tasty!

ட்வீட்-அப்

by anonymous

  • 0
  • 0
  • 0
169 views

அதாகப்பட்டது நம்ம பெங்களூரு ராகவஞ்சி... அய்யாம் சாரி ஈரோடுபதினாலு எஃபட்டில் பேசிட்டேன், நம்ம ராகவன்’ஜி சென்னை வந்து செட்டில் ஆனதைக் கொண்டாடும் முகமாக, ‘நாம மீட் பண்ணனுமே” என்று ஆர்கோகுல் ஆரம்பித்து அதை மஹாமுத்ரா ரெஸ்டரண்டில் வெச்சாத்தான் ஆச்சு என ஒற்றை விரலில் நான் ட்விட்டரில் நின்று அடம்பிடிக்க.....

....போனவாரம் வைக்கலாம், இல்லை இந்த வாரம் உசிதம், அடுத்த வாரம் பிஸி என ஆளாளுக்கு ஒவ்வொன்றைப் பேசி கடேசியில் நேற்று (9’ஜூன், இரண்டாயிரத்தி12,) மாலை அந்த மீட்டப் ட்வீட்டப்புக்கு ஏற்பாடானது.

 

ஆர்கோகுல் முழுக் குடும்பத்துடனும், நானும் ராஜேஷ்பத்மனும் அவ்வவர் மனைவிமார்களை வூட்டில் விட்டுவிட்டு புள்ளையாண்டார்களை மட்டும் இட்டுனு வந்தோம்.

 

ஃபோரெஸென், ஜேயெம்மார்_ஸீஹெச்சென், ஈரோட்ஃபோர்ட்டீன், அரிமா_ராஜ், அயாம்கார்கி, வேதாளம், ஐ_ஷன்க்கர், கிரிகேஸவன் என அவரவர் அவரவர்க்குசிதப்பட்ட நேரத்தில் தனித்தனியேவும் சேர்ந்து சேர்ந்தும் வந்து சேர்ந்தனர்.

 

நான் அவஸர ஸிகிச்சை ஹாஸ்பிடல் ஒன்றின் வாசலில் வழிமாறிச் சென்று நின்று ரெஸ்டரண்டிற்கு வழி கேட்டதும், அதன் பின் என்னை ஆண்டவர் ஆசிரம வாசலில் கிரிகேஸவர் கண்டெடுத்து மஹாமுத்ராவிற்கு அழைத்துச் சென்றதுவும் அதையொட்டி ஈரோட்டார் செய்த எள்ளிநகையாடல்களும் மக்கள் யாவரும் வருமுன்னே நிகழ்ந்தபடியால் அவை சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

 

நல்லவேளையாக கார்க்கி கொஞ்சம் லேட்டாகவே வந்தார். வந்த வேளைக்குத் தன் மொக்கை வேலையை செவ்வனே செய்தார். பெரும்பாலும் டார்க்கெட் இன்றைக்கும் வழக்கம்போல நானே!

 

1) ”கிரி’க்கு வேதாளத்தை ரொம்ப புடிக்கும், ஏன்னா அவன் வே’தாளம்”

2) கில்’ன்னா கொல்றது. அ’கில்’ன்னா கொல்லாம விடறது. அதானே உங்க பையன் பேருக்கு மீனிங்?

3), 4), 5) 6).....21) எல்லாம் சொன்னா படிக்கறவங்க தாங்க மாட்டீங்க!

 

ராஜேஷ்பதமன் & ஆர்கோகுல் குமாரர்கள் அத்தனை பெரிய ரெஸ்டரண்ட்டில் ”போங்கு” ஐஸ்பாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். அகில் கொஞ்சமாய் மற்றவர்களிடம் போய்விட்டுப் பெரும்பாலும் என் மடியில் தஞ்சமிருந்தான். சிவகாமி அமைதியாக ரகளை செய்து கொண்டிருந்தாள்.

 

சுக்குக் காப்பியும், இனிப்புக் கொழுக்கட்டை வடிவில் சில காரக் கொழுக்கட்டைகளும், கார அப்பமும், ஏதோவொரு அரிசிக் கஞ்சி சாயலிலிருந்த பாயசமும், வடைகள் சிலவும் மொசுக்கி முடித்ததும், ”ஸ்டார்ட்டர் ஆச்சு, மெய்ன் டிஷ் ஆர்டர் எடுக்கலாமா?” என்ற சிப்பந்தியிடம், “அவ்ளோதான் சார், இது வெட்டிப் பேச்சு கேதரிங். நாங்க இது சாப்டதே ஜாஸ்தி. வீட்ல நல்ல சாப்பாடு சாப்பிடப் போறோம். நீங்க பில் போடுங்க”, என்று விட்டு பில் கட்டிவிட்டுப் புறப்பட்டோம்.

 

பில்லுக்குப் பணம் பகிர்ந்த எஜமான்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகள் ட்விட்டரில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்க்க்க்க்த்துதூத்தூத்தூக்கள்.

 

கடேசியாக.... யாரை வைத்து இந்த ட்வீட் அப் பேச்சு தொடங்கியதோ அந்தப் பெங்களூரு புண்ணியவான், ”சாரி பாஸ், கொஞ்சம் தண்ணியில மூழ்கியிருக்கேன், வரமுடியலை” என்று மெஸேஜ் அனுப்பியிருந்தார்.

Add A Comment: